கற்பக விநாயகர் குளம் ஒன்றை உருவாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து வழிபட்டதால் 'கற்பகநாதர் குளம் என்னும் பெயர் பெற்றது. கடி - மணம். சிவமணம் நிறைந்த குளம் என்ற பொருளில் இவ்வூர் விளங்குகிறது.
மூலவர் 'கற்பகநாதர்' என்னும் திருநாமத்துடன், பெரிய சதுர வடிவ ஆவுடையுடன், 16 பட்டையுடன் கூடிய சிறிய பாணத்துடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'பால சுந்தரி' மற்றும் 'சௌந்தர நாயகி' என்னும் திருநாமங்களுடன் பெரிய வடிவில் காட்சி தருகின்றாள்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான், காசி விஸ்வநாதர், பைரவர், சனி பகவான், நவக்கிரங்கள் சூரியன், சந்திரன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|